வரிகளை ரத்து செய்ய தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

சொத்துவரி, தொழில் வரிகளை அரசு ரத்து செய்ய வர்த்தக சங்கம் வலியுறுத்தல்:

மதுரை

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கால் அடைக்கப்பட்ட வணிக வளாகம், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு தொழில் வரி மற்றும் சொத்துவரியினை 2020- 21.ம் ஆண்டுக்கு ரத்து செய்ய வேண்டுமென, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த மனுவில் கோரியிருப்பதாவது:
ஆகஸ்டு மாதத்தில் முழு ஊரடங்கு வேண்டாம்.காரணம் இந்த மாதத்தில் தான், அனைத்து சுப காரியங்களும், பண்டிகைகளும் வருகிறது. விநாயகர் சதுர்த்தி, ஒணம் பண்டிகைகள் ஆகியவை வருகிறது. பொது மக்களும் அத்தியவசியப் பொருட்கள் வாங்கவும், வணிகர்கள் பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
என, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என். ஜெகதீசன், செயலர் ஜெ. செல்வம், முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு ஆகியோர், தமிழக முதல்வரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அளித்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: