18 July, 2020 11:46

மதுரையில் கொரோனா தொற்றால் 4, 534 பேர் குணமடைந்துள்ளனர்: அமைச்சர் தகவல்

மதுரை

மதுரை மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மதுரை அம்மா அறக்கட்டளையின் சார்பில் மதுரை மாநகராட்சி சார்பில் இயக்கப்பட்டு வரும் அம்மா உணவகங்களை, சனிக்கிழமை காலை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருடன் ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் அவர் கூறியது:
மதுரை மாவட்ட நிர்வாகமானது, அரசின் ஆலோசனைகள் படி திறம்பட பணியாற்றி வருகிறது.
அரசு என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், அது வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கட்டாயமாகும்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக முதல்வர், மருத்துவக் குழுவின் ஆலோசனைகளை பெற்று திறம்பட செயலாற்றி வருகிறார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் தரமான உணவு வகைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் வார்டுகள்தோறும், கொரோனா பரிசோதனைகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார்.
இந்த ஆய்வில், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் சங்குமணி, துணை இயக்குநர் சுகாதாரம் ப்ரியாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: