மாநகராட்சி பகுதிகளில் சிறிய கோயில்களை தி றக்கலாம்..முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை ஆக.10 முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வருமானம் வரும் வழிபாட்டு தலங்களை ஆட்சியரின் அனுமதியுடன் திறக்கலாம்.

சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டு தலங்களை திறக்கலாம். வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசிக்கலாம்.

ஏற்கனவே பொதுமக்கள் தரிசனத்துக்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டு தலம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வரும் 10ந்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: