கருணாநிதி நினைவு தினம்

*மதுரையில் ஒரு மெரினா என்பதை நிரூபிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் மெரினாவின் நினைவிடத்தை போன்று மதுரையில் அமைத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் தலைமையில் திமுகவினர் நினைவஞ்சலி*

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.,

ஆனால் தற்போது இந்த குரானா ஊரடங்கு காலத்தில் சில பேரால் சென்னைக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தை போக்கும் வகையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மருத்துவர் சரவணன் தலைமையில் மதுரை நரிமேடு பகுதியில் மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் போன்று அமைத்து அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்.,

இந்நிகழ்ச்சியில் திமுக நகர் மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் குழந்தைவேலு வேலுச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.,

இந்த ஏற்பாட்டை கண்டு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் மதுரையில் மெரினா என்று கூறினர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: