கிராமப்புற பகுதிகளில் தொற்று அதிகம்: சுக ாதார செயலர்

விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைகள் அதிகளவில் செய்யப்படுகிறது….
சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு…..

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து, வைரஸ் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். செய்தியாளர்களிடம் பேசியது, விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகளில் நகர்புறங்களிலும், கிராமப்பகுதிகளிலும் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் இந்தப்பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேலான நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பரிசோதனைகள் அதிகமாக செய்வதால் பாதிப்பும் அதிகமாக தெரியவருகிறது. விருதுநகர் மாவட்டம் முழுவதுமே இன்னும் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். மாவட்டத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விரிவாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: