ஆலய உண்டியல் திருட்டு

பாலமேடு அருகே கோயில் உண்டியல் திருட்டு:

அலங்காநல்லூர். ஆக. 6.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியில் மந்தையில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள உண்டியல் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் கூறியது:
கோடாங்கிபட்டி மந்தையில் கிராமத்துக்கு சொந்தமான கோடங்கி அம்மன் ஆலயத்தில் வைத்திருந்த உண்டியலை மர்ம ஆசாமிகள் தூக்கிச் சென்று, பொடுகம்பட்டி செட்டி குளம் கண்மாயில் பணத்தை எடுத்து விட்டு, உண்டியலை மட்டும் வீசி சென்றுள்ளனர்.
இது குறித்து பாலமேடு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணி வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: