கண்மாயை சீரமைக்கலாமே?

கண்ணணேந்தல் கண்மாயையும் சீரமைக்கலாமே?

மதுரை

மதுரை அருகே உள்ள கண்ணணேந்தல் கண்மாயினுள் முட்புதர்கள் அடர்ந்தும், கரைகள் சிதலமடைந்தும் காணப்படுவதாக அப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் இதுவரை பல கண்மாய்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை மூலமாக சீரமைத்து வருகிறது.
அண்மையில் கூட, திருமங்கலம், மாடக்குளம் கண்மாய்கள் குடிமராமத்து பணியில் சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில், மதுரை அருகே கண்ணேந்தல் கண்மாயை உரிய பராமரிப்பின்றி, அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்ற இடமாக மாறி வருகிறது.
மேலும், கண்மாயினுள் கருவேலச் செடிகள் அடர்ந்து இருப்பதால், நீர் ஊற்றுகளும் பாதிக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியர், குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ், இந்தக் கண்மாயையும் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: