மதுரையில் தொடர் திருட்டு:

*மதுரையில் நள்ளிரவு காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்திருந்தவரிடம்
கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் :

சிசிடிவி காட்சிகள் வெளியீடு..

மதுரையில் தொடரும் திருட்டுகள்:

மதுரை

மதுரை முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை பகுதியை சேர்ந்தவர் வீரவேல் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார், இவர் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது காற்று வரவில்லை என்பதற்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார், இந்தநிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் அந்த பகுதியில் நோட்டமிட்ட 2 கொள்ளையர்கள் திடீரென வீரவேல் வீட்டிற்குள் புகுந்து வீட்டிலிருந்த விலை இருந்த 2 போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர், காலையில் எழுந்து பார்த்த வீரவேல் செல்போன் மற்றும் பணம் திருடப்பட்ட இதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் எதிரே இருக்கக்கூடிய சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவு வந்த 2 கொள்ளையர்கள் வீட்டிற்குள் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,அதனை தொடர்ந்து விரவேல் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திவருகிறார்கள், காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநருக்கு நடந்த விபரீதம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: