செய்தி

மதுரை மாநகர மக்கள் முகக் கவசம் கட்டாயம்:
காவல் ஆணையர் வலியுறுத்தல்

மதுரை

பொதுமக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பேசும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என, மதுரை போலீஸ் கமிசினர் பிரேம் ஆனந்த் சின்ஹா கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தி:
அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளில் வரிசையில் நிற்கும்போதும் ,மற்றும் பொது இடங்களிலும் யாரேனும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் உடனடியாக அவர்கள் இருப்பிடத்துடன் கூடிய புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மதுரை மாநகர வாட்ஸ்அப் குற்ற முறையீட்டு எண்ணிற்கோ (83000-21100) அல்லது Madurai City Police என்ற முகநூல் பக்கத்திலோ தாராளமாக பதிவிடலாம்.
முக கவசம் அணியாமலும் ,சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ,
இருப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்…என, குறிபிடப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: