நாளை மதுரைக்கு தமிழக முதல்வர் வருகை:

மதுரைக்கு நாளை முதலமைச்சர் நாளை வருகை:

தமிழ்நாடு முதலமைச்சர் நாளை
வருகையை முன்னிட்டு ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை,
கூட்டுறவுத்துறை அமைச்சர்
செல்லூர்.கே.ராஜு
மற்றும்
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்,
பின்பு நிருபர்களிடம் கூறியது:

இந்த ஆய்வின்போது ,
கூட்டுறவுத்துறை அமைச்சர்
தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் சிறப்பான திட்டங்களை நாளையதினம் மதுரைக்கு தொடங்கி வைப்பதோடு நிறையத்திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கின்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்கள்.
முதலமைச்சர்
மதுரைக்கு வருகை தரும் இந்த தருவாயில் கொரோனாத் தொற்று குறைந்து வருவது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. மதுரைக்கு நிறையத் திட்டங்களை கொடுத்துள்ள
முதலமைச்சர்
வரவேற்க மக்கள் ஆவலோடு உள்ளனர்.
எளிமைக்கு எளிமையான
முதலமைச்சர்
அவரின் உத்தரவின்படி, மிக எளிமையாக வரவேற்க்க உள்ளோம். கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது நல்ல செய்தியாக இருக்கிறது.
முதலமைச்சர்
மொத்தம் ரூ.326.10 கோடியில் நலத்திட்டப் பணிகள் மற்றும் ரூ.21.56 கோடியில் முடிவுற்றப் பணிகளை தனது பொற்கரங்களால் திறந்துவைத்து வழங்க உள்ளார்கள். நலிந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழிலதிபர்களை சந்திப்பதுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரைகளையும் வழங்க உள்ளார்கள். 40 ஆண்டு கால சிரமத்தை போக்கும் வகையில் மதுரை மக்களுக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் குடிநீர் கிடைப்பதற்காக லோயர் கேம்ப்லிருந்து இரும்பு பைப் மூலமாக
தண்ணீர் கொண்டு வருவதற்கு 3 கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டத்தையும் தொடங்கிவைக்க உள்ளார்கள். மதுரை மக்களுக்கு இந்த ஆட்சி ஒரு வரபிரசாதமாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
தெரிவிக்கையில்:
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று மதுரையில் மார்ச் 23ல் ஏற்பட்டதை நாமெல்லாம் அறிவோம். ஜுன் மாத இறுதியில் தொற்று மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை
தமிழ்நாடு முதலமைச்சர்
வழிகாட்டுதலோடு
கூட்டுறவுத்துறை அமைச்சர்,
நல்வாழ்வுத்துறை அமைச்சர் ,
சுகாதாரத்துறை செயலாளர்
கண்காணிப்பு அலுவலர் ஆகியோருடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை போர்கால அடிப்படையிலே எடுத்து வருகிறது.
கடந்த 45 நாட்களாக உச்சநிலையிலே இருந்த கொரோனா வைரஸின் தாக்கம் ஆறுதல் தரக்கூடிய வகையிலே படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. தினமும் சராசரியாக 400 பேருக்கு தொற்று வந்துகொண்டிருந்த நிலையில் படிப்படியாக குறைந்து நேற்று 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது நம்பிக்கை தரக்கூடிய செய்தியாக உள்ளது. தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதற்காக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. அதே 3500 என்ற எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது. நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர்
நாளை சேலம்,
திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் முடிவுற்றப் பணிகளை துவக்கிவைத்தும்,
பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு மதியம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவுற்றத் திட்டப்பணிகளை துவக்கிவைத்தும்,
பல்வேறு நலத்திட்டங்களை வழங்க இருக்கிறார்கள். பின்னர் தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம்
முதலமைச்சர்
தலைமையில் நடைபெற உள்ளது.
முதலமைச்சர்
வருகை மதுரை மக்களுக்கு நம்பிக்கையை தரக்கூடிய வகையில் உள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ,
சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன்
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்,
மதுரை மாநகராட்சி ஆணையாளர்
எஸ்.விசாகன்,
மாவட்ட வருவாய் அலுவலர்
பி.செல்வராஜ் ,
அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி
துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.பிரியா ராஜ்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)
ராஜசேகரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: