இந்து முன்னணி இனிப்பு வழங்கி கொண்டாட்டம ்:

அலங்காநல்லூர் ஐயப்பன் ஆலயத்தில் இந்து முன்னணியினர் சிறப்பு வழிபாடு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அலங்காநல்லூர், ஆக. 5.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஐயப்பன் ஆலயத்தில் இந்து முன்னணியினர் புதன்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடத்தி, இனிப்பு வழங்கினர்.
அயோத்தியில் ராமர் ஆலயத்துக்கு, பாரத பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதை கொண்டாடும் வகையில், அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில் இந்து முன்னணியினர் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, இந்து மக்கள் கட்சியின் ஒன்றியத் தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் சீத்தாராமன், இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வக்குமார், அண்ணாத்துரை, கணபதி, முரளிக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: