News in perundurai.ரானுவத்தினருக்கு இலவசம்

"ராணுவத்தினர் எது சாப்பிட்டாலும் இலவசம்!"- விஜயமங்கலத்தில் அசத்தும் பேக்கரி உரிமையாளர்!

bakeryperundurai

ஈரோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பகுதியில் ‘விஜயலக்‌ஷ்மி ஐயங்கார் பேக்கரி’ என்ற பெயரில் மூன்று பேக்கரி கடைகளை நடத்தி வருகிறார் அசோகன்.

இந்த மூன்று பேக்கரியிலும் `ராணுவ வீரர்கள் சாப்பிடும் எந்த ஒரு பொருளுக்கும் பணம் பெறப்பட மாட்டாது.

இலவசமாக வழங்கப்படும். நமது தாய் நாட்டுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணிப்புக்கு எனது சிறிய அன்பளிப்பு’ என பேனர் வைத்து அசத்தியிருக்கிறார். அசோகனின் இந்தச் செயலுக்கு பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

“கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேல இதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். என் தொழில் இருக்குறவரைக்கும் இப்படி செய்யலாமுன்னு இருக்கேன். இதைப் பார்த்து என் நண்பர்கள் சிலரும், அவங்களால முடிஞ்ச உதவியை மற்றவங்களுக்கு செஞ்சுக்கிட்டு வர்றேன்னு சொல்றாங்க.

அது கேக்குறப்ப ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. என் கடைக்கு வர்றவங்க மட்டுமல்லாம, போன்லயும் கூப்பிட்டு பாராட்டுறாங்க. நிறைய ராணுவ வீரர்கள் வாட்ஸப்ல பார்த்தேன்னு சொல்லி நெகிழ்ச்சியா பேசுறாங்க. மனசுக்கு அவ்ளோ திருப்திங்க” என்றார் அசோகன்.
கே சி கந்தசாமி
பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: