ஐஏஎஸ் தேர்வில் சாதித்த மதுரை பெண்: எம்.பி. வாழ்த்து

மதுரை மாணவி ஐஏஎஸ் தேர்வு
சு.வெங்கடேசன் எம்.பி
வாழ்த்து:

மதுரை

இந்திய ஆட்சிப் பணித் தேர்வின் முடிவுகள்(2019) வெளியாகியுள்ளன. இதில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி என்ற தம்பதியினரின்
மகளான பூரண சுந்தரி தேர்வு பெற்றுள்ளார். இவர் 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் தனது பார்வையை முழுமையாக இழந்த மாற்றுத்திறனாளி ஆவார்.
உடல் குறைபாடுகளை முயற்சிகளால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை மெய்பிக்கும் மனிதர்களின் வரிசையில் பூரணசுந்தரியும் இணைந்துள்ளார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.
அவரின் முயற்சிக்குப்பின்னே அவரது மொத்த குடும்பமும் உள்ளது. அவரை தளராது ஊக்குவித்த அந்த பெற்றோர்களை வணங்குகிறேன்.
தொலைபேசியில் வாழ்த்துச்சொல்ல பூரணசுந்தரியின் தந்தையை அழைத்தேன். அழைப்பை எடுத்த நிமிடத்திலிருந்து எனது நாவல்களை அந்த குடும்பம் எப்படியெல்லாம் வாசித்திருக்கிறது என்று இடைவிடாமல் சொல்லிமுடித்தார்கள்.
“தந்தையை வாசிக்கச்சொல்லி காவல்கோட்டம் முழுமையும் அறிந்துகொண்டேன்” என்று பெரும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார் பூரண சுந்தரி.
வரலாறு வாசிக்கமட்டுமல்ல..
வரலாற்றை உருவாக்கவும் முடியும்.என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: