News in perundurai பெருந்துறையில் வளர்ச்சிப்பனிகள்

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்தின் தொடர் முயற்சி! பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள்!

230866

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்தின் தொடர் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு செய்தார்.

குள்ளம்பாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் ஜல்சக்தி மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து 88 ஆயிரம் செலவில் 701 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியையும், திங்களூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கிராம சந்தையையும், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கான கட்டிடத்தையும் அவர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிமாலா, மோகன், உதவி பொறியாளர் அட்சயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கே சி கந்தசாமி
பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: