பாலத்தில் விளக்குகள் அமைக்க கோரிக்கை

அவசரகதியில் திறக்கப்பட்ட கன்னியாகுமரி வாரணாசி மதுரை காளவாசல் மேம்பாலம்:

இருளில் மூழ்கிக் கிடக்கும் அவலம் :

உயிர் பலி ஆகும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

மதுரை

மதுரை மாவட்டம் காளவாசல் சந்திப்பில் கன்னியாகுமரி வாரணாசி மேம்பாலம் அவனது கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது இது அவசர கதியில் திறக்கப்பட்டதால், இரவு நேரங்களில் போதியளவு விளக்கு வெளிச்சங்கள் இல்லாத காரணத்தினால், மாலை 7 மணிக்கு மேலே அதில் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மேலும், பாலமானது முற்றிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த மேம்பாலத்தில், விளக்குகள் அமைக்காமல் பாலத்தை திறந்து ஏன் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அல்லது சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் உயிர் பலியை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது
என ,குற்றம் சாட்டுகின்றனர்.

தற்காலிகமாக இரவு நேரங்களில்
பாலத்தை
மூடுவதற்கு சரியாக இருக்கும் என்பது பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.
அல்லது இரவில் விளக்கு எரியும் வகையில் செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: