LatestNews
தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை

தீரன் சின்னமலைக்
கு மரியாதை:
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் பஸ்நிலையத்தில் தீரன் சின்னமலை படத்துக்கு கொங்கு இளைஞர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்டச் செயலர் அய்யூர் தயாளன் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலர் பார்தீபன், இளைஞர் அணிச் செயலர் பாலகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் மருதுபாண்டியன், நிர்வாகிகள் ஜவகர், ஆட்டோ பாண்டி, பூக்கடை நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர்.
LatestNews
சலவைத்துறை அமைத்து தரக் கோரிக்கை

குடியிருக்க இடம், சலவைத் துறை கட்ட சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை:
மதுரை
மதுரை வண்டியூர், சதாசிவ நகர், ராஜலட்சுமி காம்பவுண்டு ஆகிய பகுதிகளில் சலவைத் தொழில் செய்யும், தொழிலாளர்கள் டோபி கானா மற்றும் குடியிருக்க வீட்டு மனை வழங்கிடக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
LatestNews
படம்

மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று விடுதலையானதையொட்டி அ.மு.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கில் கோடிஸ்வரன் தலமையில் நகர செயலாளர் ராஜா பிபு. முன்னிலையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிடனர் இதில் அவை தலைவர் சக்கரை. ஏ.வி.ராகு/வேல்முருகன். கல்லணை சந்திரன், நீ தி அசோக். கோவிலூர் செந்தில். கொண்டயம்பட்டி பாலமுருகன்.பழனிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டு கொண்டாடினர்.
LatestNews
கிரைம் செய்திகள்
[26/01, 11:15 AM] Pari: மதுரையில் பைக் திருட்டு ஆசாமி
குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் உத்தரவு
மதுரை ஜன 26 தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை சீனி நாயக்கர் தோப்பு வை சேர்ந்தவர் சிவ பாண்டி கிருஷ்ணன் மகன் பழனிவேல் பாண்டி 24 .இவர்தொடர்ந்து பைக்திருட்டு மற்றும்வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார்இவரது இந்ததிருட்டுசெயலை கட்டுப்படுத்தும் விதமாக போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்காஉத்தரவின்பேரில் பவனிவேல்பாண்டியைபோலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
********
[26/01, 11:16 AM] Pari: நீச்சல் பயிற்சியின்போது சரவணப்பொய்கையில் டைவ்அடித் பயிற்சியாளர் தலையில்அடிபட்டு பலி மணி
மதுரை ஜன 26 நீச்சல் பயிற்சியின் போது டைவ்அடித்தபயிற்சியாளர் தலையில் அடிபட்டு பலியானார்.
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 70.இவர்திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குழந்தைகளுக்கு தினந்தோறும் நீச்சல் பயிற்சி கொடுப்பது வழக்கமாக கொண்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று நீச்சல் பயிற்சி கொடுக்கும் போது சரவணப் பொய்கையில் மேல் பகுதியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடித்தார்.அப்போது குளத்தின் படிக்கட்டில்விழுந்ததால் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் பலியானார் .இந்த சம்பவம் தொடர்பாக மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதாவுசெய்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********************
குடிப்பழக்கத்தை தந்தை கண்டித்ததால்
மகன் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை ஜன 26 குளித்துவிட்டு வந்த மகனை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மணிவண்ணன் 32. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது .குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .இவரது பழக்கத்தை அப்பா கண்டித்ததால் மனமுடைந்த மணிவண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அப்பா பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் திடீர்நகர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*****************
திருப்பரங்குன்றம் கோவில் அருகே
நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி செயின் பறிப்பு
மர்ம ஆசாமிக்கு வலை
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கோயில் அருகே நடந்து சென்ற பெண்ணை கத்தியால் தாக்கி 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
தனக்கன்குளம் கலைஞர் நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுருளிவேல் மனைவி லலிதா 42. திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றிருந்தார்.அவர்அங்கு உள்ள வெயில் காத்த அம்மன் கோவில் அருகே நடந்து சென்ற போது அவரை வழி மறித்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டார் இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்து லலிதா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*******,**********
திருப்பரங்குன்றம் கண்மாயில்
நல்லிரவில்
மணல் திருடிய ஜேசிபி எந்திரம் லாரி பறிமுதல்
மதுரை ஜன 26 திருப்பரங்குன்றம் கண்மாயில் நல்லிரவில் மணல் திருடிய ஜேசிபி எந்திரம் ற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுப்ரமணியபுரம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்ஷேக்அபுபக்கர். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முனியாண்டிபுரத்தில் மாடக்குளம் கண்மாய் அருகே நள்ளிரவில் மணல் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது .அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு ஜெ.சி.பிஎந்திரத்தில் மணல்திருடிக்கொண்டிருந்த இரண்டு பேர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிவிட்டனர் .அங்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணல் திருடர்கள் பயன்படுத்திய ஜேசிபி எந்திரம் மற்றும் லாரியை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஜே.சி.பி.மற்றும் லாரியைபறிமுதல்செய்தபோலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
**********************
மதுரை கே புதூரில்
வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு
மதுரை ஜன 26 மதுரை கே.புதூரில்வீட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கே புதூர், ராம லட்சுமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் 22 .இவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தனர் .அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது .வீட்டில் வைத்திருந்த 300 கிராம் வெள்ளி பொருட்கள் தங்கமூக்குத்தி மற்றும் கடிகாரம் ஒன்றையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில் புதூர்போலீசார் வழக்கு பதிவு செய்து
திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
******************