காற்றில் பறக்கும் சமூக இடைவெளி

காற்றில் பறக்கும் சமூக இடைவெளி நோய் தொற்று பரவும் அபாயம்:

மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

மதுரை

..கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்பொழுது, மதுரை மாட்டுத்தாவணி காய்கறி அங்காடி மற்றும் வணிக வளாகம் ஆகியவை தற்காலிகமாக, மாட்டுத்தாவணி புதூர் சாலையில் உள்ள 120 சாலையில் செயல்பட்டு வருகிறது .
இதில் ,பலர் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறி மற்றும் பூக்கள் வாங்குவதாகவும் மேலும் முகக் கவசங்கள் அணியாமலும், வருவதாகவும் அதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் .
இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் சோதனை நடத்தி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது .
மேலும் ,அப்பகுதியில் உள்ள வணிகர்களுக்கு இடையூறாகவும் கடைகள் இருப்பதாகவும், ஒரு குற்றச்சாட்டும் எழுகிறது இதனால் ,அவர்களுக்கு தினசரி பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும். அப்பகுதியில் கடைகள் வைத்து வணிகம் செய்து வரும் கடை உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து கடை வைத்திருக்கும் வணிகர்களுக்கும் மேலும் வியாபாரிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: