கொரோனவை விரட்ட விநாயகரை பிரதிஷ்டை செய்த கிராம மக்கள்:

*ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு கொரோனாவை நாட்டைவிட்டே வெளியேற்ற மக்கள் நன்கு சுபிட்சம் அடைய வேண்டி சமூக அக்கறையுடன் குடும்பத்திற்க்கு ரு 100 மட்டும் வழங்கி விநாயகருக்கு பிரதிஸ்டை செய்த கிராம மக்கள்*

*சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டு*

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி அருகில் உள்ள கோவில் பாப்பாகுடி கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டை விட்டு வெளியேற மக்களை தாக்காத வண்ணம் அதிலிருந்து விலகி சுபிட்சம் அடைய வேண்டி சமூக அக்கறையின் அடிப்படையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குடும்பத்திற்க்கு ரூ 100 வீதம் வசூல் செய்து விநாயகர் கோயில் அமைக்க திட்டமிட்டனர் அதனடிப்படையில் புதியதாக விநாயகர் சிலையை சிற்பி மூலம் உருவாக்கி அதனை. கிராம எல்லையில் வைக்க தயாராகினர் இந்நிலையில் இன்று ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அருள்மிகு வசந்த விநாயகரை கிராம கமிட்டி நிர்வாகிகள் கருத்தப்பாண்டி, கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் விநாயகர் சிலையை கொண்டு வந்து ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த பீடத்தில் ஆகம விதிகளின்படி வைத்து சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

இந்நிகழ்வில் கிராமப்புற மக்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் உலகத்தை விட்டே ஒழிய வேண்டும் எனவும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தமிழக மக்கள் கொரானா என்ற கொடிய நோயை நோய் தொற்றிலிருந்து விலகிட கிராமப்புற மக்கள் குடும்பத்திற்க்கு தலா ரு 100 வழங்கி விநாயகருக்கு சமூக இடைவெளியை நன்கு கடைபிடித்து பிரதிஸ்டை செய்ததை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: