மரக்கன்று ஏந்தி முளைப்பாரி ஊர்வலம்

ஆடி பட்டம் தேடி விதைப்போம்- அலங்காநல்லூர் அருகே மரக்கன்றுகளை தலையில் ஏந்தி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
அலங்காநல்லூர், ஜூலை. 2

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வயலூர் ஊராட்சி பிள்ளையார் நத்தம் கிராமத்தில் பசுமை நண்பர்கள் சார்பில் 100 நாள் வேலை ஆட்கள் 100 நபர்களை வைத்து 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது… இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பொன் குமார் தலைமையில் பசுமை நண்பர்கள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினர். ஆடிப்பட்டம் தேடி விதைப்போம் என்ற பழமொழிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பல 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய புளியங்கன்றுகள் வழங்கப்பட்டு அதை நன்றாக பராமரித்து வளர்த்து கொடுப்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கிராம பெண்கள் ஆடி மாதத்தில் கோயில்களில் முளைப்பாரி ஏந்தி ஊர்வலம் செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மந்தை திடலில் இருந்து கிராமப் பெண்கள் மரக்கன்றுகளை தலையில் ஏந்தி முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு வந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கண்மாய்க்கரை சுற்றிலும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு மரக்கன்றுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னதாக, இந் நிகழ்ச்சியில், வயலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்தசாரதி, மாவட்டக் கவுன்சிலர் சித்ராதேவி முருகன், ஒன்றி க் கவுன்சிலர் பரமேஸ்வரி செல்லமுத்து, பணித்தள பொறுப்பாளர் பாலாமணி . சமூக ஆர்வலர் திருமலை சீனிவாசன், பேராசிரியர் இளங்கோவன்மற்றும் கிராம மரியாதை காரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: