LatestNews
ரத்த தானம் தொடங்கி வைத்த அமைச்சர்:

பள்ளியில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்:
மதுரை
மதுரை பாலமந்திர் மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்
.செல்லூர்.கே.ராஜு
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
தலைமையில் இன்று(01.08.2020) மதுரை ஆர்.ஜெ.தமிழ்மணி சாரிடபிள் அன் எஜூகேஷனல் ட்ரஸ்ட் மற்றும் மதுரை ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் இரத்த தான முகாமை தொடங்கி வைத்து பேசும்போது தெரிவிக்கையில்:
நீரின்றி அமையாது உலகு என்கிறது திருக்குறள். அதுபோல ரத்தமின்றி செயல்படாது உடல் என்பது மருத்துவம். அந்த ரத்தத்தை தானமாக வழங்க வந்துள்ள தன்னலம் கருதாது பிறர் நலன் காக்கும் கடவுளாக வந்திருக்கும் உங்களை தலைவணங்கி வரவேற்கிறேன். இந்த உதவியினால் பிறர் நலன் காப்பதோடு மட்டுமின்றி தன்நலம் மேம்படுத்துவதுடன்ää உதவிய சந்தோஷம் மற்றும் திருப்தி ஏற்படுகிறது. இதனால் பாதிப்போ அல்லது பலவீனமோ ஏற்படுவதில்லை. 10 லிருந்து 21 நாட்களுக்குள் மீண்டும் ரத்தம் உற்பத்தி ஆகிவிடுகிறது.
நமது உடலில் 5லிருந்து 6 லிட்டர் இரத்தம் உள்ளது.
ஆனால்,
350 மில்லி இரத்தம் வரை தானம் செய்யலாம். இதனை 3 பேருக்கு வழங்கி
உயிர்காக்க உதவும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும்
பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம். 18 லிருந்து 60 வயதுடையவர்கள் 45 கிலோக்கு குறையாமல் எடை இருக்கவேண்டும். ஹீமோகுளோபின் 12 லிருந்து 16 கிராமுக்குள் இருக்கவேண்டும். உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்கவேண்டும். தொற்றுநோய் உள்ளவர்களும்,
மது அருந்துதல்,
புகைபிடித்தல் ஆகிய பழக்கம் உடையவர்களும்
ஏதேனும் தடுப்பு ஊசி போட்டு 4 மாதங்களுக்குள் உள்ளவர்களும் ரத்த தானம் செய்யக்கூடாது.
ரத்த தானம் செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவது குறைவு. புற்றுநோய் அண்டாமல் காக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் குறைந்து
இரத்த அழுத்தம் சீராக இருக்கும். அரசு சார்பில் ஆண்டு ஒன்றுக்கு 350 ரத்த தான முகாம்கள் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் 38
000க்கும் மேல் ரத்தகொடையாளிகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட். ஆனால், கிடைப்பதோ வெறும் 40 இலட்சம் யூனிட்டுகள் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் உலக ‘இரத்ததான தினம்” ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ல் புரட்சித்தலைவர் சுடப்பட்டார். அப்போது
பாமர மக்கள் தொடங்கி படித்த பணக்காரர்கள் வரை ரத்த தானம் வழங்கி
பலதரப்பட்ட மக்களின் ரத்தம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஏற்றப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் கட்சிக்காரர்களை என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என தலைவர் கடைசி வரை கூறி வந்தார்.
அந்த ரத்த வார்த்தை கேட்டாலே எங்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். அப்படிப்பட்ட ரத்த தொடர்பான நிகழ்ச்சிகளில் நீங்கள் எல்லாம் பங்கேற்றதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது ,ஆர்.ஜெ.தமிழ்மணி சாரிடபிள் அன் எஜூகேஷனல் ட்ரஸ்ட் நிறுவனர் டாக்டர் ஜெயந்தி ராஜூ,
மதுரை ரோட்டரி கிளப் இயக்குநர் சுவ.ப்ரியா பார்மா
செயலாளர்
ஜெயந்தி கலைராஜம்
உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
LatestNews
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி:
மதுரையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் ஆணையர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
LatestNews
மாடு முட்டி ஒருவர் பலி

உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலி:
மதுரை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா காணும் பொங்கல் நாளான நேற்று சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 711 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 75 நபர் வீதம் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களும் காளை உரிமையாளர்களும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மிக்க வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். மேலும் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். இவர்களில் , 14 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் , வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகள் அனைத்தும் வெளியே வந்து முடிவில் காளைகளை படிப்பதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் காளை உதவியாளர்கள் நின்று அந்த காளைகளை பிடித்துச் சென்றனர். இப்படி காளைகளை பிடிக்க முயன்றபோது காளை தாக்கியதில் ஒரு நபருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் அலங்காநல்லூர் அருகே உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவமணி (24) கட்டிட தொழிலாளி என்பதும் இவர் காளைக்கு உதவியாளராக வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
LatestNews
பத்திரிக்கையாளர் தாக்கு.

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.
-
LatestNews1 month ago
கோவை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் இற ைவனடி சேர்ந்தார்.
-
LatestNews3 months ago
வீட்டுக்குள் புகுந்து உடும்பு பிடிபட்டத ு..
-
LatestNews3 months ago
மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…
-
LatestNews4 months ago
பாலியல் பகுதியாக மாறி வரும் வாடிப்பட்டி?
-
LatestNews3 months ago
தேவர் சிலை அலங்கரிப்பு..