LatestNews
போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம்
மதுரையில் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரசாரம்:
மதுரை
கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேலும் நாளை முழு ஊரடங்கு பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்துள்ளார்கள் மேலும் ஆகஸ்ட் மாதம் 5-ந் ஆயிற்று கிழமைகளும் எவ்வித தளர்வுகள் ஊரடங்கு என தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருந்தார்கள் இதனடிப்படையில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை இவ்வித தளர்வுகள் இன்றி இவருடன் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மதுரை மாநகர முழுவதும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள் இதன் அடிப்படையில் இன்று தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல் ஆய்வாளர்கள் பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலையில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர் இதில் கூறுகையில் பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும் மீறி வருவதற்கு அபராதமும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நோய் தீவிரம் குறையும் எனவும் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார் இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது .
LatestNews
சகதியில் சிக்கி தவித்த மாடு மீட்பு…

வடுகபட்டியில்
சேறுசகதியில்சிக்கிதவித்த
பசுமாடு மீட்பு:
வாடிப்பட்டி,மார்ச்:4.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி முத்தாலம்மன்கோவில்தெருவை
சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் பவுன் பாண்டியன்(35)விவசாயி. இவர் பசுமாடு
வளர்த்துவருகிறார் அந்த மாடு தற்போது சினைபிடித்துள்ளது. இந்நிலையில்
நேற்று காலை 10மணிக்கு வடுகபட்டி அரிசிஆலை எதிரில் உள்ள
பெரியாறுபாசனகால்வாய் ஓடையில் மாட்டினை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சேரும்சகதியும்நிறைந்த புதைகுழிக்குள் மாடு
சிக்கிக்கொண்டது. உடனே அதை மீட்கமுயற்சித்தார் அவரால் முடியவில்லை. அந்த
புதைகுழியில் மாட்டின் கால்முழுவதும் உள்ளே இழுத்துக்கொண்டது இதனால், மாடு
எழமுடியாமல் அவதியடைந்தது.
இது சம்மந்தமாக தகவலறிந்த, வாடிப்பட்டி
தீயணைப்பு நிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள்
1மணிநேரம் போராடி புதைகுழிக்குள் சிக்கியிருந்த சினைமாட்டினை மீட்டனர்.
LatestNews
போலீஸ் கொடி அணிவகுப்பு…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு பேரணி :
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி மேல்நிலைப் பள்ளியில் இருந்து கொடி அணிவகுப்பு புறப்பட்டு அவனியாபுரம் பேருந்து நிலையம் கணக்குப்பிள்ளை தெரு பெரியார் நகர் இம்மானுவேல் நகர் பிரசன்னா காலனி வழியாக அவனியாபுரம் சிஎஸ் நகரில் பேரணி முடிவு பெற்றது.
இதில் , மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணை கமாண்டன்ட் ஜிந்தா தலைமையில் 75 வீரர்களும் , திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் சிவராஜ் பிள்ளை மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ், சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரர், தமிழ்ச்செல்வம் அடங்கிய போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறப்பு காவல் படை வீரர்கள் அணி வகுப்பை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LatestNews
வாக்கு மையங்கள் ஆய்வு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு:
சோழவந்தான்
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை வருவாய் உட் கோட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் தலைமை நில அளவையாளர் செந்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து வருவாய் ஆய்வாளர்கள் அழகுகுமார் ராஜன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ் முத்துக்குமரன் மணிவேல் சூசைஞானசேகரன் முபரக் சுல்தான் பழனி வெங்கடேசன் கார்த்திக் செல்வமணி சுரேஷ் கார்த்திஸ்வரி முத்துராமலிங்கம் பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .
மொத்த வாக்காளர்கள் 2180 87 இதில், ஆண்கள் வாக்காளர்கள் 107097 பெண் வாக்காளர்கள் 110 363 மற்றவர்கள் 10 மொத்த வாக்கு மையம் 126 உள்ளன இதில் 70 மையங்களை பார்வையிட்டனர் கட்டட தன்மை கழிப்பறை வசதி மின்வசதி காற்றோட்ட வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்று ஆய்வு செய்தனர்