நிவாரனப் பொருட்கள் வழங்கல்:

கோரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே வெள்ளாந்தி மலை கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300 க்கும் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தெரிசனங்கோப்பு சந்திரா மருத்துவமனை நிர்வாகம் சார்பாக டாக்டர் மகாதேவன் பிள்ளை, அவரது மனைவி அட்வகேட் ரூபா மற்றும் மூன்று குழந்தைகளுடன் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான 5 கிலோ அரிசி மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

கோரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் ஊரடங்கால் ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 0 மேலாக இடங்களில் சந்திரா மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசிக்கும் கீரிப்பாறை அருகே அமைந்துள்ள வெள்ளாந்தி, மாறாமலை உள்ளிட்ட மலைப்பகுதி கிராமங்கள் கோரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதியில் வாழும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் அனைத்து வகையான காய்கறிகள் உள்ளிட்டன அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கபசுர குடிநீரும் முக கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டன, நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய கவுன்சிலர் மேரி ஜாய், மலையோர விவசாயிகள் சங்க பேரவைத் தலைவர் ஜீனோ, உறுப்பினர் மணிகண்டன், வார்டு உறுப்பினர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: