தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணின் தங்கசங்கிலி பறிப்பு

டூவிலரில் வந்த மர்ம ஆசாமிகள் அட்டகாசம்

மதுரை

மதுரையில் திருப்பரங்குன்றம் மெயின்ரோட்டில் டூவிலரில் கணவரின் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவரும் அவரது மணைவி பேச்சி வயது 50. ஆகியோர், திருப்பரங்குன்றம் சாலையில் டூவிலரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பேச்சி கழுத்தில் அணிந்திருந்த பத்து சவரன் நகையை பறித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: