பணம் கேட்டு உள்ளூர் தொலைக்காட்சி உரிமைய ாளர் கடத்தல்:

*மதுரையில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர் 10 லட்சம் கேட்டு கடத்தல் – போலீஸ் தீவிர விசாரணை*

மதுரை எல்லீஸ் நகர் பசும்பொன் தேவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் சொந்தமாக Ni TV என்னும் உள்ளூர் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயராஜை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்று பத்து லட்சம் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணையில் ஜெயராஜ் நிலக்கோட்டையில் இயங்கிவரும் மாரியம்மன் டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனத்தில் ஆலோசகராக இருந்து வந்ததும்,

அதில் இருந்து பத்து லட்ச ரூபாய் நிதியை தனது சொந்த செலவுக்கு எடுத்துள்ளதாகவும், அதற்கு மாதம் வட்டி கட்டுவதாக கூறி ஒரு வருடம் ஆகியும் வரவில்லை எனவும்,
அதனால் அதன் நிர்வாகிகள் இவரை காரில் கடத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: