ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா:

மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா:

மதுரை

மதுரையில் தீயணைப்புத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காணொளி காட்சி மூலம் பரிசுகளை, சென்னை தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு வழங்கி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஊட்டியதுடன், பெற்றோர், பள்ளியிலும், சமுதாயத்திலும் எப்படி செயல்படவேண்டும் என, அறிவுரைகளை வழங்கினார்.
மதுரை தென்மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணை இயக்குநர் பி. சரவணக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அலுவலர் கல்யாணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பிரிவில் கே. ஆரிபா, கேந்திரா வித்யாலயா, பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடத்திலும், பத்து வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், பி. ஹம்சா குணா லியோனர் ,சேரன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி உசிலம்பட்டி மாநில அளவில் பங்கு பெற்றமைக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: