ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் ஜப்தி செய்ய உத்தரவு!

*மதுரை தனியார் (ரிலையன்ஸ்) இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய உத்தரவு – ஊழியர்கள் எதிர்ப்பு குடும்பத்தினர் தர்ணா..!!*

மதுரை: தேனியை சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை கீழக்கரணை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்,

இதனையடுத்து இழப்பீட்டு தொகை கோரி தொடரப்பட்ட வழக்கில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக 40லட்சம் ரூபாயை மதுரை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் (ரிலையன்ஸ்) இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது,

இந்நிலையில் ஒரு வருட காலத்தை கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்காத நிலையில் நீதிமன்ற ஊழியர்கள் இன்று இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்து சீல் வைக்க நேரில் சென்றனர்

இதனையடுத்து ஜப்திக்கு சென்ற நிலையில் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரின் மனைவி வினோதினி மற்றும் அவரது குழந்தையுடன் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால் நிறுவன வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது,ஊழியர்கள் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்களை ஜப்தி செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறை உதவியுடன் வந்து ஜப்தி செய்யவும் என ஊழியர்கள் தெரிவித்த நிலையில் நீதிமன்றம் ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர்

கணவன் உயிரிழந்தற்கான இழப்பீட்டு தொகையை தராமல் ஒரு வருடமாக அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: