ஆக.6-ல் எடப்பாடி மதுரை வருகை

*வருகிற ஆகஸ்ட் ஆறாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து கொரானா பணிகளை குறித்து ஆய்வு செய்ய உள்ளார் மதுரை வட பழஞ்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார். செல்லுர் ராஜீ பேட்டி*

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சியில் உள்ள கொரானா சிறப்பு முகாமை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார், செல்லூர் ராஜீ செய்தியாளர்களை சந்தித்தனர்.

வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும்போது.

நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சிகிச்சைக்குப் பின் முழு குணம் அடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது

வைரஸ் தொற்றிலிருந்து முழுவதும் மீண்டு வந்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

மதுரை மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர்க்கு 5 சென்டர் அமைக்கப்பட்டுள்ளது

இப்பொழுது தற்சமயம் மதுரை மாவட்டம் வடபழ்ஞ்சில் மூன்று அடுக்குகளில் கொண்டுள்ள இந்த அடுக்கு மாடியில் இதில் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளது

நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது

காய்ச்சல் கண்டறியும் முகாம் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது இதுவரை 7500 காய்ச்சல் முகாம்கள் மதுரையில் செயல்பட்டு வருகிறது

மிக விரைவில் தமிழகத்தின் முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்

தொற்றினால் ஏற்படும் மரணங்களை மறைப்பதற்கு அரசுக்கு தேவையில்லை தொற்று மற்றும் பல்வேறு நோய்களோடு உள்ளவர்கள் மட்டுமே சிகிச்சை பலனின்றி இறக்க கூடிய வாய்ப்பு என்பது ஏற்பட்டுள்ளது

அடுத்தாக செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ்

இந்த நோய்க்கு மருந்து கிடையாது தனித்து இருக்கனும் விழித்து இருக்கனும் என்பதே மறந்து

வைரஸ் தொற்று வந்தாலும் பயப்படக்கூடாது இந்த நோயைப் பொறுத்தவரையில் எந்த வித அச்சமும் தேவையில்லை

வந்துவிட்டது என்றால் நாம் தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலே போதும்

யோகா செய்தாலே போதுமானது இந்த நோயை விரட்டிவிடலாம்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: