தடுப்பணைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

சென்னை: தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 21 திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: