கொரோனா: 76 வயது கணவனைக் காக்க… 10 நாள் உடன் இருந்து பார்த்துக் கொண்ட மனைவி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயது கணவரைக் காப்பாற்ற 10 நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து பணியாற்றிய அவரது மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் மதன கோபாலுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மனநலம் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் கணவருக்கு கொரோனா எனத் தெரிந்ததும் 66 வயதான அவரது மனைவி லலிதா அவரை விட்டுப் பிரியாமல் மருத்துவரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே கணவருடன் 10 நாட்கள் இருந்து கணவரைக் கவனித்துக் கொண்டார். மூதாட்டி லலிதாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 10 நாட்கள் சிகிச்சை முடிந்து முதியவர் பூரண குணமடைந்து வீட்டுக்குச் சென்றது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

  • கே.சி.கந்தசாமி, பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: