அரசு விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்:

அரசு விதி மீறிய 10 ஆட்டோக்கள் பறிமுதல்
118 ஆட்டோக்களுக்கு ரூ.78,500 அபராதம்
மதுரை, ஜூலை 31
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பேருந்துகள், மேக்சி கேப் வாகனங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் இரு பயணிகலுடன் செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் ஆட்டோக்கள் சமூக இடைவெளியில்லாமல் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி இறங்குவதாக போக்குவரத்து துறையினருக்கு அவ்வப்போது புகார்கள் வந்தன.
நோய்த் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் ஆட்டோக்கள் ஆய்வு செய்யும்படி சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு மதுரை சரக போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மூன்று நாட்கள் போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் 585 ஆட்டோ பரிசோதனை செய்யப்பட்டு, 118 ஆட்டோக்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டன. சோதனையின் வாயிலாக ரூ.78,500 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.19,300 வசூல் செய்யப்பட்டது. மேலும் சோதனையில் 10 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டதாக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: