LatestNews
தவணைத் தொகை கேட்டு மிரட்டல்:

தவணைத் தொகை கேட்டு மிரட்டும்
பைனான்ஸ் நிறுவனத்தினர் கலெக்டரிடம் மனு
மதுரை, ஜூலை 31
மகளிர் குழுக்கள் சார்பில் கடன் பெற்றவர்களிடம் கடனை கட்ட கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக புதூரை சேர்ந்த மகளிர் குழுவினர் சித்ரா தலைமையில் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
அவர்களது புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புதூரில் குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் செய்யும் பெண்கள் மகளிர் குழுக்களில் இணைந்து கடன் பெற்றனர். தற்போது ஊரடங்கு காரணத்தால் கடந்த 4 மாதங்களாக வரு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் மகளிர் குழுக்களில் பெற்ற கடன் தொகையை செலுத்த இயலவில்லை. ஆனால் மகளிர் குழுக்கள் மூலம் கடன் கொடுத்த நிறுவனத்தினர் அடியாட்களுடன் வந்து வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர். மேலும் தவணைத் தொகை கட்டவில்லை என்றால் கூடுதல் வட்டி சேர்த்து பணம் கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர். எனவே பிரச்சனைகள் தீரும் வரை தனியார் நிறுவனங்கள் பணம் கேட்டு தொல்லை செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
LatestNews
தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை:

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மதுரை அதிமுக மாணவரணி சார்பில் தமுக்கம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அருகில் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம் எஸ் பாண்டியன் மாவட்ட பொருளாளர் ராஜா மாணவரணி செயலாளர் குமார் உள்ளிட்ட திரளான மாணவர்கள் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
LatestNews
உதயநிதிக்கு நிர்வாகம் பற்றி தெரியாது…அம ைச்சர்
*உதயநிதி ஸ்டாலின்*
*நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்*
*அவருக்கு நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாது*
*மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி*.
மதுரை :
மதுரையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க.வினர், மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
அதன் பின் அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உதயநிதி ஸ்டாலின் ஊழல் குறித்து பேசலாமா? உதயநிதி ஸ்டாலினின் தாத்தாவும்,தந்தையும் ஊழலில் திளைத்தவர்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகத்தை பற்றி ஒன்றும் தெரியாது.
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் சேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மக்கள் தான் எஜமானார்கள். மக்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை வரைஒரே முடிவாகத்தான் இருக்கும்.
சென்னையிலேயே ஸ்டாலின் ஏன் சுற்றிக்கொண்டுள்ளார். மதுரைக்கும் வர சொல்லுங்கள்.
அதிமுக நிற்கும் இடங்களில் திமுக நிற்கும் என கூறியுள்ள நிலையில் ஸ்டாலினே நின்றாலும் மக்கள் அவரை தோற்கடிக்க தயாராகி விட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவினை வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டணி பேச்சுவார்த்தையை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்ற சகோதரி பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு முதல்வர், மற்றும்துணை முதல்வர் ஆகியோரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விரைவில் முடிவடுத்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
LatestNews
இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி…

அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி:
கிராம மக்கள் வியப்பு
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு நேற்று ஆட்டுகுட்டிபோட்டது அது இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது