இலவச முகக் கவசத்திலும் முறைகேடு: சரவணன் எம்எல்ஏ

இலவச முககவசத்திலும் ஊழல்
டாக்டர் சரவணன் எம்எல்ஏ கருத்து
மதுரை, ஜூலை 31
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வுமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா இறப்பு தொடர்பாக அரசும், அமைச்சர்களும் கொடுக்கும் புள்ளிவிவரங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அரசு இறப்பு விகிதத்தை மறைக்கிறது. கொரோனாவிலிருந்து பொதுமக்களை காக்கும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் தரவேண்டும் என முதலில் தி.மு.க., வலியுறுத்தியது. ஆனால் அப்போது கண்டுகொள்ளாத அ.தி.மு.க., அரசு தற்போது முகக்கவசம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த முக கவசம் வழங்குவதிலும் அமைச்சர் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. முக கவசத்தை ரேஷன் கார்டு வாயிலாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: