சிறு, குரு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி அரசு ஒதுக்கீடு:

மதுரையில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

மதுரை, ஜூலை. 29.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
நடைபெற்ற நிகழ்ச்சியில்,
வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
.ஆர்.பி.உதயகுமார்
பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

தமிழ்நாடு முதலமைச்சர்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும்
நோய்த் தொற்று ஏற்பட்டோரை சிகிச்சை அளித்து மீட்டெடுப்பதிலும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசு பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும்,
பாதுகாப்பாகவும் அமல்படுத்தியது.

இதுவரை 6 முறை பொதுமுடக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் வீடு வீடாக சென்று நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து சோதனை செய்தல்
தனிமைப் படுத்துதல்
சிகிச்சை அளித்தல் போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக நமது மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.
கடந்த இரண்டுவார காலமாக நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்
நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களின் களநிலவரங்களை கேட்டறிந்தார்கள். இன்று மருத்துவர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்த களநிலவரங்களை கேட்டறிந்த
தமிழ்நாடு முதலமைச்சர்
பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.

தொழில்துறையில் கவனம் செலுத்தி தொழில்துறையை மீட்டெடுக்கும் வகையில் சிறு,
குறு தொழில்களை ஊக்கப்படுத்தி
மாணியம் அளிப்பது,
பொது முடக்க காலத்தில் அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து ரொக்கமாகவும்
நிவாரண தொகுப்புகளாகவும்
தமிழ்நாடு முதலமைச்சர்
வழங்கி வருகிறார்கள். இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற வகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்கள்.

கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதாகும். இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா இரண்டு திரும்ப பயன்படுத்தும் முகக்கவசங்கள் வீதம் ரூ.14 கோடி அளவில் முகக்கவசங்கள் வழங்கும் திட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள். வரும் 5 தேதியிலிருந்து தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளின் மூலம் வழங்கப்படும்.

சிறுää குறு விவசாயிகள் மற்றும் தொழில் புரிபவர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் பல்;வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதியோர் ஓய்வூதியம்ää வீட்டுமனை பட்டாää முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளோடுää பருவகால தொற்று நோய் தடுப்பு பணிகள்ää வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் நிவாரண பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு மாண்பமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

சிறு,
குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களை அரசு விதியின்படி பரிசோதனை செய்து பணிகளில் ஈடுபடுத்த
தமிழ்நாடு முதலமைச்சர்
அனுமதி வழங்கியுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் ,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்
மாநகராட்சி ஆணையாளர்
எஸ்.விசாகன்,
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: