குமரி திரிவேணி புனித நீர் அயோத்திக்கு…

கன்னியாகுமரி: ராம ஜென்ம பூமியான அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கு புனித ஸ்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித தீர்த்தம் மற்றும் மண் எடுக்கப் பட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி மற்றும் நாட்டின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக நாட்டின் முக்கிய புனித ஸ்தலங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டுவரப்பட்டு அடிக்கல் நாட்டும் இடத்தில் தெளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தென்கோடி முனையும் புனித ஸ்தலமுமான சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்திலிருந்து புனித தீர்த்தம் மற்றும் மண் எடுக்கப் பட்டு பூஜை செய்யப்பட்டு அயோதிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிஷத், பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: