கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்:

சமயநல்லூரில் கொரோனா தடுப்பு பரிசோதனை சிறப்பு முகாம்:

சோழவந்தான், ஜூலை.

மதுரை அருகே சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமை நடத்தியது.
இந்த முகாமுக்கு, மதுரை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லதுரை தலைமை வகித்தார். சமயநல்லூர் ஊராட்சித் தலைவர் மலையாளம் முன்னிலை வகித்தார்.மாவட்ட திட்ட மருத்துவ அலுவலர் அருள் சுந்தரேஸ்வரன், சிறப்பு பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களான, சுந்தர்சாமி, தர்மராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: