மழையால் பாதித்த இடங்களை பார்வையிட்ட அதி காரிகள்:

காரியாபட்டியில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம்,
காரியாபட்டி பகுதியில் ,கடந்த சில தினங்களாக பெய்த மழையினால், கண்மாய் குளங்கள் தண்ணீர் நிரம்பியது.
வரத்து கால்வாயில் அதிகமாக தண்ணீர் ஓடியதால் சில இடங்களில் படுத்து கால்கள் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தது. பல்வேறு இடங்களில் மழையினால், ஓட்டு வீடுகள் குடிசை வீடுகள் மற்றும் சாலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆலோசனை பேரில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், காரியாபட்டி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். மழை நீர் தேங்கி கிடக்கும் இடங்களை உடனடியாக தண்ணீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். காரியாபட்டி கருங்குளம் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். காரியாபட்டி திமுக நகரச் செயலாளர் செந்தில், கிராம நிர்வாக அதிகாரி காசிமாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: