எங்களுக்கும் கொஞ்சம் ஊதிய உயர்வு கொடுங்களேன்..!

ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும், தூய்மை காவலர்களுக்கு, நாளொன்றுக்கு, 100 ரூபாய் அடிப்படையில், மாதம், 2,600 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

வீடு தோறும் குப்பை சேகரித்து, தரம் பிரித்து, குப்பை கிடங்குகளில் சேர்ப்பதுதான், இவர்களின் வரையறுக்கப்பட்ட பணி. ஆனால், அனைத்து வகையான துப்புரவு பணியிலும், இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பெருந்துறை, சென்னிமலை ஒன்றியத்தில், 300க்கும் மேற்பட்டோர் தூய்மை காவலர் பணியில் உள்ளனர். மாத சம்பளம், 2,600 ரூபாயை கொண்டு, வாழ்க்கை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இந்நிலையில், 2020 மார்ச் மாதம், சட்டசபை கூட்டத்தில், 1,000 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அரசாணை பிறப்பிக்காமல், ஊதியமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் உள்பட, ?50க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள், பெருந்துறை தாசில்தாரிடம், நேற்று மனு கொடுத்தனர். முதல்வருக்கு அனுப்பி வைத்து, ஊதிய உயர்வு கிடைக்க செய்யுமாறு வலியுறுத்தினர்.

  • கே.சி.கந்தசாமி

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: