மதுரை மாவட்டத்தில், கஞ்சா விற்போர் மீது ந டவடிக்கை: போலீஸ் எஸ்.பி.

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் எஸ்.பி.

மதுரை:

மதுரை மாவட்டத்தில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என, போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆனந்தத்
தாண்டவம் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ரோந்து பணி மேற்கொள்ளும்
போது, சோதனை ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த காளை(65) , பெருமாயி(60) இருவரை கைதுசெய்து செய்தனர்.
மேலும் ,இது சம்பந்தமாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா 195 கிலோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.
பாஸ்கரன்,
எச்சரித்து உள்ளார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: