கந்த சஷ்டி திருவிழா நவ.4-ல் தொடக்கம்:

பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா:

மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர் கோயில் மலைமேல் அமைந்துள்ள பழமுதிர் சோலை முருகன் கோயிலில், நவ. 9-ம் தேதி செவ்வாய்கிழமை பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும், என கோயில் நிர்வாக அதிகாரி அனிதா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
மதுரை அழகர்கோயில் மலைமேல் உள்ள முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவானது, நவ. 4-ம் தேதி வியாழக்கிழமை தொடங்கி, நவ. 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இக் கோயிலில், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் முடிந்த பிறகே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
கொரோனா நடைமுறை அமலில் உள்ளதால், பக்தர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
இதேபோல், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா, நவ. 4..ம் தேதி தொடங்கி, நவ. 10-ம் தேதி வரை நடைபெறுகிறது என, கோயில் துணை ஆணையாளர் மு. ராமசாமி தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: