பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அமைச்சர் மாலை:

பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அமைச்சர் மாலை:

மதுரை:

திருப்பரங்குன்றம். அருகே விளாச்சேரியில் தமிழ் செம்மொழியாக குரல் கொடுத்த, பரிதிமாற் கலைஞர் 118- வது நினைவு நாள் நடைபெற்றது.
வணிகவரி, பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு பரிதிமாற்
கலைஞருக்கு மாலையணிவித்தார்.
மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றம் விளாச்சேரியில், பரிதிமாற் கலைஞர் நினைவிடம் உள்ளது.
சூரிய நாராயண சாஸ்திரி எனும் தனது பெயரை தமிழ் பற்றாள் "பரிதிமாற் கலைஞர்" எனும் மாற்றிகொண்டார்.
ஏராளமான தமிழ் இலக்கிய நூல்கள், பல்வேறு மொழிபெயர்ப்புகள் என தமிழக்கு அருந்தொண்டாற்றியவர்.
மேலும், தமிழை "செம்மொழியாக" அறிக்க கோரி முதன்முதலில் குரல் கொடுத்தவர்
என்பது குறிப்பிடதக்கது . அரசு சார்பில் மாலை மரியாதை செலுத்திய பின், மேலும், பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: