நரிக்குறவர்களுக்கு, நிவாரணம் வழங்கிய அத ிமுகவினர்:

நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், நரிக்குறவர் குடும்பங்களுக்கு அதிமுக சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெயத கனமழையினால், நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது.
இதனால், பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு தேவையான அரிசி, பலசரக்கு வேஷ்டி, சேலை மற்றும் உணவு பொருட்கள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பழனி வழங்கினார். அதிமுக நகர துணைச்
செயலாளர் அழகர்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பெரியசாமி, பாண்டி, அழகர் இளைஞர் பாசறை செயலாளர் இராஜேந்திரன் பூக்கடை கணேசன், குருசாமி, கண்ணன் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: