சிலம்பாட்ட கலைஞர்களுக்கு நிவாரனம்:

ஊரடங்கு காரணமாக ஐந்து மாதமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிலம்பாட்ட கலைஞர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை

சோழவந்தான், ஜூலை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழ் கலாச்சார விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் ஒயிலாட்டம் தீப்பந்தம் சுருள் கத்தி வீச்சு போன்ற விளையாட்டு கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர் கொரோனா தொற்று நோய் பரவல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கி அன்றாட வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளது இதேபோல் சிலம்பாட்டக் கலைஞர்களும் முடங்கிப்போய் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்து இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ராஜாங்கம் 60 இவர் சிறுவயதில் இருந்து பல கலைஞர்களிடம் பல வித்தைகள் கற்றுள்ளார் கற்ற வித்தைகளை பல ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தான் கற்ற வித்தைகளை கற்றுக்கொடுத்து வருகிறார் மேலும் இந்தக் கலைகள் மூலம் சென்னை திருச்சி தஞ்சாவூர் நீலகிரி போன்ற பெரு நகரங்களில் நடக்கக்கூடிய அரசு விழாக்களில் கலந்து கொண்டு எம்ஆர் ராதா நாசர் ராதாரவி போன்ற நடிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் இடமும் பாராட்டுப் பெற்று தான்கற்ற சிலம்பாட்டம் ஒயிலாட்டம் தீப்பந்தம் சுருள் கத்தி போன்ற கலைகளை அரசு விழா திருவிழாக்கள் போன்ற விழாக்களில் தன்னுடைய திறமையை தன்னுடைய குழுக்கள் மூலம் தமிழ் கலாச்சார விளையாட்டை பறைசாற்றி வந்துகொண்டிருக்கிறார் தற்போது ஊரடங்கு உத்தரவால் சுமார் ஐந்து மாதம் இவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதித்து கஷ்டப்பட்டு வருகிறார்கள் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் தை மாதம் முதல் ஆறுமாதம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தமாகும் ஊரடங்கு உத்தரவு காரணமாக இதுபோன்ற போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை இதனால் இவர்களைப் போன்ற கலைஞர்களையும் அழைக்க முடியவில்லை இதனால் இவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது ஆகையால் எங்களுக்கு குடும்பத்திற்கு 40000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று இவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: