மாணவி விடுதி அருகே உள்ள மதுபானக் கடையை மா ற்ற விவசாயிகள் அமைப்பு கோரிக்கை:

மாணவிகள் தங்கும் விடுதி அருகே மதுபானக் கடையை அகற்ற கோரிக்கை:

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி விடுதி அருகே செயல்பட்டு வரும், அரசு மதுபானக் கடையை, வேறு பகுதிக்கு மாற்றக் கோரி, பொது மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் பெரியாறு- வைகை, திருமங்கலம் ஆயக்கட்டு பாசன சங்கத் தலைவர் ராமன் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
உசிலம்பட்டி வட்டம், நடுமுதலைக் குளம், விக்கிரமங்கலம் செல்லும் சாலையில், உன்டாங்கல் மலையடிவாரத்தில் சமணர்கள் வாழ்ந்த இடம். மேலும், மாணவிகளின் விடுதியூம் செயல்படுவதால், அங்கு செயல்படும், மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, இந்த மனு அளிக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: