முன்னாள் எம்.எல்.ஏ. உடலுக்கு முதல் அமைச்ச ர் ஸ்டாலின் அஞ்சலி:

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நன்மாறன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் நேற்று மாலை காலமானதையடுத்து மதுரை மகபூப்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நன்மாறனின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கண்ணப்பன், அன்பின் பொய்யாமொழி மகேஷ், கீதா ஜீவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: