ஜல்லிகாட்டு காளைகளை வேனில் ஏற்றி வந்த 10 ப ேர் கைது

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு பயிற்சிக்கு காளைகளை ஏற்றி வந்த 10 பேர் கைது

அலங்காநல்லூர், ஜூலை. 29.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வேனில் நான்கு காளைகளை ஏற்றி வந்த பத்து பேரை போலீஸார் மடக்கி கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியது:
மதுரை பணையூரிலிருந்து ஜல்லிக்கட்டு பயிற்சிக்காக நான்கு காளைகளை வேனில் ஏற்றிக்கொண்டு அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே, வேனை வாவிடமருதூர் அருகே மடக்கியும், வேனில் இருந்த பணையூரைச் சேர்ந்த முத்துக்குமார், சரவணன், ரஞ்சித் உள்ளிட்ட பத்து பேரை கைது செய்து அலங்காநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: