காரியாபட்டியில், கொரோனா மெகா தடுப்பூசி ம ுகாம்:

காரியாபட்டியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம்,
காரியாபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. காரியாபட்டி எஸ்..பி.எம் . மருத்துவமனை வளாகத் தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் முகாமினை, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில், தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு எஸ்.பி. எம்.டிரஸ்ட் சார்பாக, ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. முகாமில் ,பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் , கல்குறிச்சி அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ் சுந்தர் ,எஸ்பிஎம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, எஸ்.பிஎம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிஷ் ஆகியோர கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: