திருமால் நத்தம் கிராமத்தில், திருவேடகம் விவேகானந்தா கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் வி ழிப்புணர்வு பேரணி:

சோழவந்தான் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி: விழிப்புணர்வு முகாம்:

மதுரை:

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், உன்னத் பாரத் அபியான் அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சி திருமால்நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் தி. வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். திருவேடகம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் நிகழ்ச்சியில் சிறப்புரை
யாற்றினார். கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் துணை முதல்வர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் அகத்தர உறுதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு உரையாற்றினார். ஆசிரியர் மாரிமுத்து நிகழ்வை ஒருங்கிணைத்தனர். விவேகானந்த கல்லூரி மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர் முனைவர் வடிவேல் ராஜா நன்றி உரையாற்றினார். கிராம மக்கள், பள்ளி சிறுவர்கள், தாய்மார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: