மதுரை நகர குற்றச் செய்திகள்:

மதுரை நிதி நிறுவனத்தில்
12 லட்சம் கையாடல்
ஊழியருக்கு வலைவீச்சு:

மதுரை:

மதுரையில், நிதி நிறுவனத்தில் ரூபாய் 12 லட்சம் கையாடல் செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர் .
மதுரை ஞான ஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இதன் வர்த்தகப் பிரிவு மேலாளர் பாக்கியராஜன். இவர், கரிமேடு குற்றப்பிரிவு போலீசில்ல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், தங்களது நிதி நிறுவனத்தில் ஞான ஒளிவு புரம் சகாயமாதா தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷ்வரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த ஓராண்டாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்த பணம் ரூபாய் 12 லட்சத்து 785 ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்பேரில் ,ஊழியர் விக்னேஸ்வரன் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மதுரையில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை
பெண் உட்பட 5 பேர் கைது:
போலீசார் அதிரடி:

மதுரை:

மதுரையில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் உட்பட 5 பேரை கைது செய்து, போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
செல்லூர் ரயில் தண்டவாளம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக, தத்தனேரியை சேர்ந்த அன்பு மகன் பிரகாஷை 24. செல்லூர் போலீசார் கைதுசெய்து அவரிடமிருந்து பத்து பாட்டில்களை பறிமுதல்செய்தனர். இதே போல்,
பட்டிமேடு சுடுகாட்டருகே விற்
பனை செய்ததாக தபால் தந்தி நகரை சேர்ந்த பாபு 60.ஐ, கூடல்புதூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஆறு பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுவிலக்கு போலீசார் டிடி ரோட்டில் மது விற்பனை செய்த அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த அருண் 33 .என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, செம்பூரணி ரோட்டில் மெஸ் ஒன்றின் அருகே மது பாட்டில் விற்பனை செய்த காளியம்மாள் 55 .என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்கள் செம்பூரணி ரோடு சந்திப்பில் சந்திப்பு பகுதியில் விற்பனை செய்த அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த நாகராஜன் 39. என்பவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த கார் திருட்டு:

காமராஜர் சாலையில் கைவரிசை:

மதுரை

வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த காரைத் திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை காமராஜர் சாலை கிருஷ்ணாபுரம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சேது ராவ் 57. இவருக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார். அதிகாலை எழுந்து பார்த்த போது, காரை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டு தொடர்பாக சேதுராவ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ப் பதிவு செய்து கார் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

மதுரையில் மூன்று பைக்குகள் திருட்டு :
வெவ்வேறு இடங்களில் சம்பவம்:

மதுரை:

மதுரையில், வெவ்வேறு இடங்களில் நிறுத்தியிருந்த மூன்று பைக்குகள் திருடப்பட்டது தொடர்பாக திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் 35. இவர் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினரை பார்க்க சென்றிருந்தார்.
அவர் உள்ளே சென்று திரும்பி வந்தபோது மருத்துவமனைக்கு எதிராக நிறுத்தி இருந்த அவரது பைக்கை ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக ,சதீஷ்குமார் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்துள்ளார் .
ஜெய்ஹிந்த் புரம் சோலை அழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் யோகராஜன்23. இவர் செல்லூர் பூந்தமல்லி நகரில் தனக்கு சொந்தமான ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது, அந்த பைக் திருடப்பட்டிருந்தது.
இந்த திருட்டு தொடர்பாக, யோகராஜா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ,திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர். தெற்குவெளிவீதி பந்தடி குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவநாதன் 58. இவர் இவருக்கு சொந்தமான ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டு வாசல் முன்பாக நிறுத்தி இருந்தார். அந்த பைக்கும் திருடு போய்விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிவநாத், தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டுகளில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மாட்டுத்தாவணி எதிரே
வாலிபரை தாக்கிய செல் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை:

மதுரை :

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சென்னம ரெட்டிபட்டி பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் 26.இவர் மாட்டுத்தாவணி எதிரே நடந்து சென்ற போது, அந்த வழியாக பைக்கில் சென்ற 2 பேர் விக்னேஷை தாக்கி அவரிடமிருந்து ரூபாய் மூவாயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்று விட்டனர் .
இந்த சம்பவம் குறித்து, விக்னேஷ் ,கே. புதூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
2 பேர் கைது:

மதுரை:

மதுரை கேட்லாக் ரோடு நேருதெரு ஈபி ஆபீஸ் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, பழைய மீனாட்சி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் 29,அதே பகுதியை சேர்ந்த முருகன் 44 இருவரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 236 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

மதுரையில்
தவறி விழுந்த 2 பேர் பலி:

வெவ்வேறு சம்பவங்களில்:

மதுரை:

மதுரை தபால் தந்தி நகர் மீனாட்சி நகரைசேர்ந்தவர் தனசேகரன் 40 .இவர் வீட்டின் முதல் மாடியில் சென்றபோது தவறி விழுந்தார்.இதில் பலமாக அடிபட்டுசம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது விளாங்குடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் 57. இவர் நோய்வாய்ப்பட்டிருந்த இந்நிலையில் கூடல்நகர் விளாங்குடி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது மயங்கி விழுந்தார்.
இதில் தலையில் பலமாக அடிபட்ட நிலையில், அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து, கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: