கொரோனா பரிசோதனை முகாம்:

முள்ளிப்பள்ளத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்:

சோழவந்தான், ஜூலை. 29.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில், மன்னாடிமங்கலம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்றமும் இணைந்து, கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமை நடத்தியது.
இந்த சிறப்பு முகாமுக்கு, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார்.
அரசு மருத்துவர்கள் அருண்கோபி, ஹேமலதா ஆகியோர்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர் முள்ளை சக்தி, ஊராட்சி செயலர் மனோபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: