மதுரை அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உய ிருடன் மீட்பு:

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு:

மதுரை:

மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி அருகே கரடிக்கல் கிராமத்தில் தோட்டத்து கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கரடிக்கல்லைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான பசுமாடு, ஆண்டிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறை விரைந்து வந்து, கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: